கோலகுபுபாரு,பெர்த்தாக் நீர்வீழ்ச்சிப் பகுதியில் குளித்துக்கொண்டு இருந்த போது சீன நாட்டை சேர்ந்த இரு பெண்கள் நீரில் மூழ்கி மாண்டனர். இச்சம்பவம் பூர்வகுடி கிராமத்திற்கு அருகில் நேற்று மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்து.
55 வயது ஸியா யூஹான் லிங் அவரின் தோழியான 52 வயது ஜென்னி வோங் ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் அடையாளம் கூறினர். 55 வயது மாதுவின் உடல், சம்பவ இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் பாறைகளில் இடுக்குகளில் செருகிக்கிடந்த வேளையில் 52 வயதுடைய மற்றொரு மாதுவின் உடல் இரவு 10.20 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் வான் முஹமாட்வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்த இரு சீனப் பெண்களும் நேற்று மாலையில் அந்த நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டு இருந்த போது கனத்த மழையின் காரணமாக மலைமுகட்டிலிருந்து பாய்ந்த நீரின் வேகம் திடீரென்று அதிகரித்தைத் தொடர்ந்து அவ்விரு பெண்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இருவரின் சடலங்களும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, சவப்பரிசோதனைக்காக கோலகுபு பாரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வான் முஹமாட்வான் இஸ்மாயில் மேலும் விவரித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


