Jun 28, 2026
Thisaigal NewsYouTube
சீனப் புத்தாண்டு: பெரும்பாலான மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

சீனப் புத்தாண்டு: பெரும்பாலான மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.16-

மலேசியாவின் பெரும்பாலான தீபகற்ப மாநிலங்கள், சபா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரை மற்றும் சரவாக் மாநிலத்தின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை, சீனப் புத்தாண்டின் முதல் நாளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா கணித்துள்ளது.

பேராக் மாநிலத்தின் பெரும்பாலான கடற்கரைப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், ஜோகூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழையும் பெய்யக்கூடும்.

கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, கிளந்தான் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களின் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.

Related News