Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தேசிய கால்பந்து வீரரின் மாமியார் கைது – போலி கடப்பிதழ் கும்பல் சிக்கியது!
தற்போதைய செய்திகள்

தேசிய கால்பந்து வீரரின் மாமியார் கைது – போலி கடப்பிதழ் கும்பல் சிக்கியது!

Share:

கோம்பாக், அக்டோபர்.05-

தேசிய கால்பந்து வீரர் ஒருவரின் மாமியார் என நம்பப்படும் ஒரு பெண்ணும் மூன்று பாகிஸ்தான் நாட்டவர்களும், போலி கடப்பிதழ் முத்திரைத் தயாரிப்புக் கும்பலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்டு கோம்பாக் பகுதியில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். பல மாதங்களாகச் செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் இந்தக் கும்பலைப் பிடிப்பதற்காகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், கோம்பாக் மாவட்டக் காவற்படையின் தலைமையகத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்தச் சோதனையை மேற்கொண்டது. சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில், பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளின் அதிகாரப்படியான முத்திரைகள் சிக்கியுள்ளன. இந்தக் கைது நடவடிக்கையை கோம்பாக் மாவட்டக் காவற்படையின் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் நோர் அரிஃபின் முகமட் நசீர் உறுதிப்படுத்தினார். கைது செய்யப்பட்ட அனைவரும் அக்டோபர் 8ஆம் தேதி வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டு, ஆவண மோசடி தொடர்பாகச் சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News