ஈப்போ, ஜனவரி.02-
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில், வயது முதிர்ந்த தம்பதி சென்ற கார் ஒன்று, விபத்திற்குள்ளாகி, தீப்பிடித்து எரிந்ததில், அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் உயிர் தப்பினர்.
இந்த விபத்தானது, நேற்று காலை 8.20 மணியளவில், வடக்கு நோக்கிச் செல்லும் சாலையில், ஈப்போ டோல் சாவடி அருகே நிகழ்ந்தது.
68 வயது மதிக்கத்தக்க அத்தம்பதி சென்ற கார், மற்றொரு காருடன் மோதி தீப்பற்றியதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை துணை இயக்குநர் ஷாஸ்லின் முஹமட் ஹனாஃபியா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அத்தம்பதி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாகவும், சம்பவ இடத்திற்கு உடனடியாக மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.








