கோலாலம்பூர், நவம்பர்.03-
பள்ளிகளில் ஆசிரியர்களைத் தவிர இதர பணிகளில் அமர்த்தப்பட்டர்கள், மாணவர்கள் சூழல் அமைப்புடன் பணியாற்றப் பொருத்தமானவர்களா என்பது தொடர்பில் அவர்களின் பின்னணி குறித்து ஆராயப்படும் என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு கல்வி அமைச்சு எடுக்கக்கூடிய பொருத்தமான மற்றும் ஏற்புடைய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஆசிரியர்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் பணியாளர்களுக்கான இந்த தணிக்கைச் சோதனையைக் கல்வி அமைச்சு மேற்கொள்ளவிருக்கிறது என்று இன்று நாடாளுமன்றத்தில் வோங் கா வோ இதனைத் தெரிவித்தார்.








