Jun 30, 2026
Thisaigal NewsYouTube
அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

Share:

மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டம் கேலமாக் பகுதியில், வீட்டின் முன் பகுதியில், புதைக்கப்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு கண்டறியப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐந்து பேரின் தடுப்புக் காவல், மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

16 முதல் 40 வயதிற்க்குட்பட்ட சந்தேக நபர்கள் அனைவருக்கும், வரும் புதன்கிழமை வரை, தடுப்புக் காவல் நீட்டிப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஜுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.

பிறப்பை மறைத்த குற்றத்திற்காக, குற்றவியல் சட்டம் பிரிவு 318-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இவ்வழக்கில், விசாரணை ஆவணங்கள் இன்று துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அக்குழந்தையின் தாயார் என நம்பப்படும் 19 வயது இளம்பெண், அவரது தாய், சகோதரி, சகோதரர் மற்றும் அப்பெண்ணின் காதலர் ஆகிய நால்வரும், அந்த நான்கு குடும்ப உறுப்பினர்களில் அடங்குவர் என ஜுல்கைரி குறிப்பிட்டுள்ளார்.

Related News

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மானிய விலை ஆரோக்கியப் பரிசோதனை நாளை முதல் தொடக்கம்

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மானிய விலை ஆரோக்கியப் பரிசோதனை நாளை முதல் தொடக்கம்

காஜாங் சூட்கேஸ் கொலை வழக்கு: பெண் தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலவமானது

காஜாங் சூட்கேஸ் கொலை வழக்கு: பெண் தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலவமானது

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி