கோலாலம்பூர், அக்டோபர்.16-
சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க இன்று வியாழக்கிழமை சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்துகிறது தேர்தல் ஆணையம்.
மாநிலத் தேர்தலுக்கான முக்கியத் தேதிகள், வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் நாள், முன்னோட்ட வாக்குப் பதிவு, வாக்குப் பதிவுக்கான நாள் மற்றும் பிரச்சாரக் காலம் உள்ளிட்ட அறிவிப்புகள் இன்று பிற்பகல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் 6 -ஆம் தேதி, 16-வது சட்டமன்றம் கலைக்கப்படுவதாக சபா முதல்வர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் அறிவித்ததையடுத்து, அம்மாநில தேர்தலுக்கு அது வழி வகுத்துள்ளது.








