May 5, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் லுண்டுவில் இளம் பெண் கொலை - கைகலப்பால் நேர்ந்த கொடூரம்
தற்போதைய செய்திகள்

சரவாக் லுண்டுவில் இளம் பெண் கொலை - கைகலப்பால் நேர்ந்த கொடூரம்

Share:

கூச்சிங், பிப்ரவரி.13-

சரவாக் மாநிலம், லுண்டுவில் நேற்று வியாழக்கிழமை காலை, அங்குள்ள வாடகை வீடு ஒன்றில், இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.

18 வயதான அப்பெண் சுயநினைவிழந்த நிலையில், சரவாக் பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், லுண்டு மாவட்ட போலீஸ் தலைவர் சுடிர்மான் க்ராம் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட பரிசோதனையில், உயிரிழந்த அப்பெண்ணின் கண் மற்றும் இடது கன்னத்தில் வீக்கம் இருப்பதும், மூக்கைச் சுற்றி உறைந்த இரத்தம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதே வேளையில், உயிரிழந்த அப்பெண் மற்றும் அவரது சக ஊழியர்களும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு மது அருந்தியதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், அப்பெண்ணுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த நபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எழுந்த கைகலப்பில் அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய. வந்துள்ளது.

Related News