கோலாலம்பூர், அக்டோபர்.14-
இம்மாத இறுதியில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ள 47வது ஆசியான் உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று திங்கட்கிழமை ஆய்வு செய்தார்.
மாநாட்டு மண்டபம், ஊடக வசதிகள் மற்றும் உச்சி மாநாடு சுமூகமாக நடப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை, அன்வார் 30 நிமிடங்களுக்கும் மேலாக ஆய்வு செய்தார்.
அன்வாருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான், அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பாக்கார் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அம்ரான் முஹமட் ஸின் ஆகியோரும் உடன் இருந்தனர்.
வரும் அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறவுள்ள 47வது ஆசியான் உச்சி மாநாடு, 2025 ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் ஆசியான் தலைமைப் பதவியின் நிறைவைக் குறிக்கிறது. இம்மாநாட்டின் கருப்பொருள் — “ஒற்றுமையும் நிலைத்தன்மையும்” ஆகும்.








