Oct 15, 2026
Thisaigal NewsYouTube

சட்டவிரோத குடியேற்றவாசிகள் லாங்காவியில் உள்ள Teluk Yu கடற்கரையில் படகில் வந்திறங்கினர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சட்டவிரோத குடியேற்றவாசிகள் லாங்காவியில் உள்ள Teluk Yu கடற்கரையில் படகில் வந்திறங்கினர்

ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்த 196 மியான்மர் சட்டவிரோத குடியேற்றவாசிகள் லாங்காவியில் உள்ள Teluk Yu கடற்கரையில் படகில் வந்திறங்கினர். அவர்களை ஏற்றி வந்த படகு தரை தட்டியதால் அவர்கள் பிடிபட்டனர் என Ketua Pengarah Maritim Malaysiaவின் அமலாக்கப் பிரிவின் தலைமை இயக்குநர் Laksamana Maritim Datuk Mohd Rosli Abdullah தெரிவித்தார்.

மேலும் இரண்டு படகுகள் மியான்மர் நாட்டவர்களை ஏற்றி வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, மலேசிய கடல்சார் Maritim Malaysia தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. காணாமல் போன படகுகளைக் கண்டறிய ரோந்து பணிகளும் வான்வழி கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, காணாமல் போன படகுகள் குறித்து தகவல் பெற முயற்சித்து வருகிறது Maritim Malaysia. லாங்காவியைச் சுற்றியுள்ள கடல்சார் சமூகத்தினரும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தெலுக் யூ கடற்கரையில் மக்கள் தரையிறங்கிய படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்