Sep 29, 2026
Thisaigal NewsYouTube
சருமப் பராமரிப்புப் பொருட்களைத் திருடிய மாதுவிற்கு ஒரு நாள் சிறை, அபராதம்
தற்போதைய செய்திகள்

சருமப் பராமரிப்புப் பொருட்களைத் திருடிய மாதுவிற்கு ஒரு நாள் சிறை, அபராதம்

Share:

மலாக்கா, பிப்ரவரி.25-

பல்வேறு சருமப் பராமரிப்புப் பொருட்களைத் திருடிய குற்றத்திற்காக 31 வயது தனித்து வாழும் தாயாருக்கு மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒரு நாள் சிறைத் தண்டனையும், 900 ரிங்கிட் அபராதமும் விதித்தது.

ஜாய்லீன் லோ மெய் லிங் என்ற அந்த மாது, தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கானி இந்தத் தண்டனையை விதித்தார்.

கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி மாலை 5.30 மணியளவில், பத்து பெரெண்டாம் பகுதியில் உள்ள வாட்சன்ஸ் கிளை வளாகத்தில் சம்பந்தப்பட்ட மாது, சருமப் பராமரிப்புப் பொருட்களைப் திருடியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News