காஜாங் மற்றும் பாண்டான் பெர்டானா ஆகிய பகுதிகளில் போலி குடிநுழைவுத்துறை முத்திரைகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 3-ஆம் தேதி குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், மலேசிய ஆடவர் ஒருவரும், தாய்லாந்து பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போலி குடிநுழைவு முத்திரைகள், தாய்லாந்து கடப்பிதழ்கள், கைப்பேசிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளையில், வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர்களை அணுகி, ஒவ்வொரு போலி முத்திரைக்கும் 70 முதல் 100 ரிங்கிட் வரை கட்டணம் வசூலித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதுடன், தொடர்புடைய மற்றவர்களையும் அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.








