Nov 6, 2026
Thisaigal NewsYouTube

நஜிப்பின் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு ரோஸ்மா மறுப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப்பின் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு ரோஸ்மா மறுப்பு

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதற்காக இரண்டு பிரதிநிதிகள் இன்று உயர் நீதிமன்றத்திற்குச் சென்றதாக வெளியான தகவல் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என அவரது மனைவியான டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்தச் செய்தி தவறானதாக இருந்தால், அதை வெளியிட்டவர்கள் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற சூரியசக்தி திட்ட ஊழல் வழக்கு விசாரணையில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →