லுமூட், செப்டம்பர்.26-
பேரா, லுமூட், தெலுக் பாதேக் கடற்கரையோரம் ஈமச்சடங்கு காரியத்தின் போது, முதியவர் ஒருவர் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அதிகாலையில் சடங்கு முடிந்த நிலையில் கடற்கரைக்குச் சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர், திடீரென்று காணாது குறித்து குடும்பத்தினர் அச்சம் கொண்டனர். பின்னர் இது குறித்து காலை 6.28 மணிக்கு தீயணைப்பு, மீட்புப் படையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அதிகாலையில் கடற்கரையின் அலைகள் உயர்ந்து காணப்பட்ட நிலையில் அவர் நீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஶ்ரீ மஞ்சோங் மற்றும் பங்கோர் தீயணைப்பு, மீட்புப்படை நிலையங்களின் வீரர்கள் அந்த முதியவரைத் தேடும் பணியை முடுக்கியுள்ளனர்.








