Mar 15, 2026
Thisaigal NewsYouTube
இன உணர்வைத் தூண்டும் அறிக்கை வேண்டாம்  துன் மகாதீருக்கு ஒற்றுமைத்துறை அமைச்சர் நினைவுறுத்து
தற்போதைய செய்திகள்

இன உணர்வைத் தூண்டும் அறிக்கை வேண்டாம் துன் மகாதீருக்கு ஒற்றுமைத்துறை அமைச்சர் நினைவுறுத்து

Share:

மலேசியாவில் இன உணர்வைத் தூண்டக்கூடிய எந்தவொரு அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் துன் முகாதீர் முகமதுவை ஒற்றுமைத்துறை அமைச்சர் Datuk Seri Aaron Ago Dagang கேட்டுக்கொண்டார்.

அண்மையில் வெளிநாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மலேசியாவில் உள்ள இந்தியர்கள், தங்கள் நாட்டின் மீது முழு விசுவாசத்தை கொண்டிருக்கவில்லை என்று துன் மகாதீர் கூறியிருப்பது அதிகபட்சமாகும் என்று Aaron Ago Dagang வர்ணித்தார்.

இது மலேசியாவில் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியாகும் என்று அவர் குறிப்பிட்டார். மலேசியாவை ஒரு நவீன நாடாக கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றியவர் துன் மகாதீர் ஆவார்.

பல இன மக்களிடையே ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வளர்க்க வேண்டிய மற்றும் அது குறித்து ஆக்கப்பூர்வமான கருத்தை தெரிவிக்க வேண்டிய ஒரு முன்னாள் தலைவர் இத்தகைய அறிக்கையை வெளியிட்டு இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று Aaron Ago Dagang குறிப்பிட்டார்.

துன் மகாதீர் மட்டும் அல்ல, அரசியல் தலைவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இன, மத உணர்வுகளை உரசிப்பார்க்கக்கூடிய, வெறுப்புணர்வைத் தூண்டக்கூடிய அறிக்கைகளை வெளியிட வேண்டாம். இது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைத்து விடும் என்று Aaron Ago Dagang எச்சரித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்