Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிறப்பு பதிவு எண்ணை சாலை போக்குவரத்து இலாகா வெளியிடுகிறது
தற்போதைய செய்திகள்

சிறப்பு பதிவு எண்ணை சாலை போக்குவரத்து இலாகா வெளியிடுகிறது

Share:

நாட்டின் 66 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாலை போக்குவரத்து இலாகா வாகனங்களுக்கு எம்-எம் என்ற சிறப்பு பதிவு எண் பட்டையை வெளியிடுகிறது. இதற்கான டெண்டர்கள் வரும் வியாழக்கிழமை தொடங்கி செப்டம்பர் 4 ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்று போக்குவர​த்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். வாகன எண் பதிவு அட்டையில் தொடக்கமாக எம் எழுத்தும், அதன் பின்னர் வரிசை எண்களும் கடைசி எழுத்து எம் என்று முடிவுறும் என அந்தோணி லோக் விளக்கினார். மலேசியா மெர்டேக்கா என்ற பொருளை தாங்கிய நிலையில் இந்த சிறப்பு பதிவு எண் பட்டைகள் வெளியிடப்படுவதாக அவர் விளக்கினார்.

Related News