Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சிலாங்கூர் மாநிலத்தின் முதலாவது தேசிய புவியியல் பூங்கா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலாங்கூர் மாநிலத்தின் முதலாவது தேசிய புவியியல் பூங்கா

பத்துகேவ்ஸ், நவ. 16-


கோம்பாக் - உலுலங்காட் ஜியோ பார்க் என்ற தேசிய புவியியல் பூங்கா, சிலாங்கூர் மாநிலத்தின் முதலாவது தேசிய ஜியோ பார்க் பூங்காவாகும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தாான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா இன்று பிரகடனம் செய்துள்ளார்.

இந்த பிரகடனமானது, இயற்கை வளம் நிறைந்த பூவியியல் அமைப்பு முறையை பாதுகாக்கும் உள்ளூர் மக்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் அதேவேளையில் சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவதற்கு சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வரும் கடப்பாட்டை காட்ட வல்லதாக உள்ளது என்று சுல்தான் குறிப்பிட்டார்.

இன்று சனிக்கிழமை கோம்பாக் - உலு லங்காட் ஜியோ பார்க் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யும் நிகழ்வில் உரையாற்றுகையில் சுல்தான் இதனை தெரிவித்தார்.

கோம்பாக் - உலுலங்காட் ஜியோ பார்க் என்பது புவியியல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியாகும். சுற்றுலா மற்றும் புவியியல் சார்ந்த கல்வி, அறிவியல் தொடர்புடைய ஆய்வுகளுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட வனப்பகுதியாகும். இது உள்ளூர் மக்களுக்கு இயற்கை சூழல் சார்ந்த நிறைய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கித் தரக்கூடியதாகும்.

கோம்பாக் மாவட்டத்தையும், உலு லங்காட்டையும் இணைக்கும் இந்த ஜியோபார்க், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 955 ஹெக்டர் நிலப்பரப்பளவை கொண்டதாகும்.

வருகின்ற 2028 ஆம் ஆண்டில், யுனோஸ்கோவின் உலகளாவிய ஜியோபார்க் அங்கீகாரத்தை பெறுவதற்கு அதன் அனைத்துலக நிபந்தனைகளை நிறைவு செய்யும் வகையில் கோம்பாக் - உலு லங்காட் ஜியோ பார்க், தேவைகள் நிறைவு செய்யப்படுவதற்கு உறுதி கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளையில் 2025 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில சுற்றுலா ஆண்டுக்கு கோம்பாக் - உலுலங்காட் ஜியோ பார்க் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →