Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மேம்படுத்தப்பட்ட புதிய ஊதியமுறை ; வல்லுனர்கள் புலம்பெயரும் பிரச்சனையை களையும்
தற்போதைய செய்திகள்

மேம்படுத்தப்பட்ட புதிய ஊதியமுறை ; வல்லுனர்கள் புலம்பெயரும் பிரச்சனையை களையும்

Share:

கோலாலம்பூர், ஜூலை 03-

நாட்டிலுள்ள வல்லுனர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் சிக்கலுக்கு விரைந்து தீர்வுக்காணப்படும்.

புதிய ஊதியமுறையை மேம்படுத்தியது அந்தத் தீர்வுகளில் ஒன்று என பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா சுட்டிக்காட்டினார்.

அப்புதிய ஊதிய முறையானது, அயல்நாடுகளில் வழங்கப்படுவதற்கு ஒப்ப, அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதை உறுதிச் செய்யும்.

நாட்டிலுள்ள அறிஞர்களும், நிபுணர்களும் வெளிநாடுகளுக்கு இடமாறுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
அதுபோன்ற மாற்றங்கள் நிபுணத்துவம் வாய்ந்த ஆள்பலத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

அதே சமயம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஊறு விளைவிக்கும்.

அந்தப் பிரச்சனையை சமாளிக்க ஆக்ககர ஊதியமுறைகள் மேம்படுத்தப்படுவது அவசியம்.

மக்களவையில் கடந்தாண்டு 11 இலட்சத்து 80 ஆயிரம் (1.18 juta) வல்லுனர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தது தொடர்பில், கூலிம் பண்டார் பாரு உறுப்பினர் ரோஸ்லன் ஹாசிம்-மின் கூடுதல் வினாவுக்கு, டாக்டர் சாலிஹா விடையளித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்