Nov 27, 2026
Thisaigal NewsYouTube

கூகுள் நிறுவனத்துக்கு எதிரான வழக்கை நியாயப்படுத்தினார் பிரதமர் அன்வார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கூகுள் நிறுவனத்துக்கு எதிரான வழக்கை நியாயப்படுத்தினார் பிரதமர் அன்வார்

யூடியூப் தளத்தில் இடம்பெறும் இணையவழி சூதாட்ட விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் தொடர்பான புகார்களுக்குக் கூகுள் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கத் தாமதித்ததால், அந்நிறுவனத்துக்கு எதிராக அரசாங்கம் வழக்குத் தொடர்ந்துள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சில புகார்கள் ஆறு மாதங்கள் வரை பதிலளிக்கப்படாமல் இருந்ததாகவும், இதனால் கூகுள் நிறுவனத்திடம் நேரடியாகப் பிரச்சினையை எழுப்பியதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அல்ஃபாபெட் (Alphabet) நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி ருத் பொராட்டைத் தாம் தொடர்பு கொண்டதாகவும், பிரச்சினைக்குத் தீர்வுகாண கூகுள் ஒத்துழைக்கும் என அவர் உறுதியளித்ததாகவும் அன்வார் தெரிவித்தார்.

இதற்கிடையில், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், யூடியூப் தளத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு அந்நிறுவனத்தின் மலேசிய வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனவரி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை இணையவழி சூதாட்டம் தொடர்பாக 74,703 புகார்கள் யூடியூப் தளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 99.8 விழுக்காடு சூதாட்டம் தொடர்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →