Nov 27, 2026
Thisaigal NewsYouTube

அரச விமானப்படை விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தல் மிகப் பெரிய தேசத் துரோகம்: பிரதமர் அன்வார் சாடல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அரச விமானப்படை விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தல் மிகப் பெரிய தேசத் துரோகம்: பிரதமர் அன்வார் சாடல்

அரச மலேசிய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தப்படுவது மிகப் பெரிய தேசத் துரோகச் செயலாகும் என்றும், இது நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் அம்பாங் பள்ளிவாசலில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், இச்சம்பவம் குறித்து அனைத்து அமலாக்க அமைப்புகளும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், இத்தகைய முறைகேடுகள் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவற்றைத் தனிப்பட்ட சம்பவங்களாகக் கருத முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சபாவில் உள்ள விமானப்படை வசதிகளைப் பயன்படுத்தி, 156 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மூன்று டன் மெத்தாம்பெத்தமின் போதைப்பொருளைக் கடத்தியதாக ஒரு கும்பல் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அரச விமானப்படை விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தல் மிகப் ப... | Thisaigal News