தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அயலகத் தமிழர் தின மாநாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ளக்கூடாது என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான ஆர்.எஸ்.என் ராயர் வலியுறுத்தியுள்ளார்.
திருகார்த்திகையையொட்டிய மகா தீபம் ஏற்றுவது தொடர்பான இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றத் தமிழக அரசு, தவறியதால், மலேசிய இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்துக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 11 முதல் 13ஆம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள 2027 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் தினம் மாநாட்டு நிகழ்வில் கலந்து கொள்வதிலிருந்து பிரதமர் அன்வார் புறக்கணிக்க வேண்டும் என ராயர் கேட்டுக் கொண்டார்.
மேலும், இந்த மாநாட்டிற்கு மலேசியப் பிரதிநிதிகள் குழுவையும் அரசாங்கம் அனுப்பக்கூடாது என வலியுறுத்திய ஆர்.எஸ்.என் ராயர், இந்த நடவடிக்கை மலேசிய இந்துக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.








