Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கெடா மாநிலத்தில் முதலீட்டுத் திட்டங்களை முறியடிக்க பெரிய திட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கெடா மாநிலத்தில் முதலீட்டுத் திட்டங்களை முறியடிக்க பெரிய திட்டம்

அலோர்ஸ்டார், நவ.25-


கெடா மாநிலத்தில் தனியார் முதலீட்டுத்திட்டங்களை தோல்வி அடைய செய்வதற்காக பெரிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது தங்களுக்கு தெரியவந்துள்ளதாக மாநில மந்திரி பெசார் சனூசி நோர் கூறுகிறார்.

கெடா மாநிலத்தில் முதலீட்டுத் திட்டடங்களில் ஈடுபட நோக்கங்களை கொண்டுள்ள தனியார் நிறுவனங்கள், அந்த முதலீட்டுத் திட்டங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கு அவற்றுக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம் என்று சனூசி நோர் குறிப்பிட்டார்.

உதாணத்திற்கு கெடா மாநிலத்தில் லங்காவியில் 40 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள லங்கா சுக்கா முதலீட்டுத்திட்டத்தில் ஈடுபட முனைந்த பின் ஸையாட் இண்டர்நேஷனல் குரூப் நிறுவனம், அந்த முதலீட்டுத்திட்டத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டுள்ளதாக சனூசி நோர் தெரிவித்தார்.

அந்த நிறுவனம், தன்னை மீட்டுக்கொண்டதற்கான காரணங்கள் கூறப்படவில்லை என்று சனூசி நோர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முதலீட்டுத்திட்டத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு நேற்று தாம் அம்பலப்படுத்தியது போல அவற்றுக்கு பல்வேறு நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டு வருவதாக மந்திரி பெசார் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →