தாவாவ், அக்டோபர்.25-
சபா மாநிலத்தில், மீனவர்களை அச்சுறுத்தி வந்த 60 வயதான ராட்சஷ முதலையை அம்மாநில வனவிலங்குத் துறை அதிகாரிகள் நேற்று பிடித்துள்ளனர்.
சுமார் 800 கிலோ முதல் 1000 கிலோ எடை கொண்ட அம்முதலை, 5.4 மீட்டர் நீளம் கொண்டது என்று சபா வனவிலங்குத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஸுல்கர்நாயின் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
மெரொத்தாய் பெசார், கம்போங் பெங்காலான் அஸ்லி என்ற இடத்தில் பொறி வைத்து அம்முதலையை வெற்றிகரமாகப் பிடித்துள்ளதாகவும் ஸுல்கர்நாயின் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், அவ்விடத்தில் மேலும் இரண்டு முதலைகளும் பிடிபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








