Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பிரதமர் கேள்வி நேரத்தில் எதிர்கட்சியினரின் கேள்விகள் தவிர்க்கப்படுகின்றதா? - நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டிற்கு அன்வார் மறுப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் கேள்வி நேரத்தில் எதிர்கட்சியினரின் கேள்விகள் தவிர்க்கப்படுகின்றதா? - நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டிற்கு அன்வார் மறுப்பு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.11-

நாடாளுமன்றத்தில், பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது எதிர்கட்சியினரின் கேள்விகள் தவிர்க்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக, ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பதிலளிக்கப்பட்டு வருவதாக, கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் நாடாளுமன்றத்தில் இன்று குற்றம்சாட்டினார்.

நிர்ணயிக்கப்பட்ட நேர வரம்பிற்குள் தாங்கள் கேள்விகளை சமர்ப்பித்தும் கூட, எதிர்கட்சியினரின் ஒரு கேள்வி கூட தேர்வு செய்யப்படுவதில்லை என்றும் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.

இதனையடுத்து அதற்குப் விளக்கமளித்த அன்வார், தான் எந்த ஒரு கேள்வியையும் தவிர்க்கவில்லை என்றும், சபாநாயகர் தேர்வு செய்யும் கேள்விகளுக்கு உடன்பட்டு பதிலளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், அமெரிக்க பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விக்குத் தாம் பதிலளித்ததைச் சுட்டிக் காட்டிய அன்வார், ஒரே மாதிரியான கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் போது அவை இயல்பாகவே தவிர்க்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு கேள்விக்கு ஏற்கனவே பதிலளிக்கப்பட்டு, அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருந்தால், அதே கேள்வி மீண்டும் கேட்கப்படும் போது அதற்கும் அதே பதில்தான் வழங்க இயலும். எனவே தான் சபாநாயகரின் முடிவை ஏற்றுக் கொண்டு பதிலளிப்பதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்