ஈப்போ, ஆகஸ்ட்.23-
மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், டிரெய்லர் லோரியுடன் மோதி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் பேரா, கெரிக் அருகில் நிகழ்ந்தது.
இதில் கெடா பாலிங்கைச் சேர்ந்த 36 வயது ரொஸிமான் அபு அஸிஸ் என்பவர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கெரிக் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் சாமாட் ஒத்மான் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








