அலோர் ஸ்டார், ஆகஸ்ட்.24-
கெடா மாநில மக்களின் முக்கியச் சிக்கல்களுக்கு தீர்வு காணுமாறு, செக்ரெதெடியட் சுவாரா அனாக் கெடா என்ற அமைப்பின் தலைமைச் செயலாளர் சுலைமான் இப்ராஹிம், கெடா மாநில முதல்வர் சனுசி நோருக்கு ஒரு கண்டன அறிக்கை வழங்கினார். மாநிலத்தில் அதிக முதலீடுகள் வந்தும், ஒரு லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அத்துடன், சுற்றுப் பயணத் தலங்களின் மோசமான பராமரிப்பு, சுகாதாரக் குறைபாடுகள், மலைக் குவாரிகளால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களையும் அவர் சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவித்தார். இந்த சிக்கல்களுக்கு உடனடியாக விளக்கம் அளிக்குமாறு சனுசியை அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.








