Sep 23, 2026
Thisaigal NewsYouTube
வட சுமத்திரா பகுதியில் நிலநடுக்கம்: ஷா ஆலமில் லேசான அதிர்வு
தற்போதைய செய்திகள்

வட சுமத்திரா பகுதியில் நிலநடுக்கம்: ஷா ஆலமில் லேசான அதிர்வு

Share:

இந்தோனேசியாவின் வட சுமத்திரா பகுதியில் ஏற்பட்ட 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக, இன்று மதியம் ஷா ஆலம் பகுதி அலுவலகங்களில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகப் பணியாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

மதியம் 12.18 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், புவி மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா உறுதிப்படுத்தியுள்ளது.

ஷா ஆலம் செக்சன் 14, செக்சன் 13 மற்றும் செக்சன் 26 ஆகிய பகுதிகளில் பணிபுரிந்த பலரும் அலுவலக மேசைகள் அதிர்வதை உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Related News