கோலாலம்பூர், பிப்ரவரி.24-
ஊழியர் சேமநிதி வாரியமான ஈபிஃஎப், 2025 ஆம் நிதியாண்டிற்கான லாப ஈவு விகிதங்களை வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி சனிக்கிழமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கணிப்புப்படி, இம்முறை லாப ஈவு விகிதம் 6.3 விழுக்காடு முதல் 6.5 விழுக்காடு வரை இருக்கலாம் எனத் தெரிகிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஈபிஃஎப்பின் மொத்த முதலீட்டு வருமானம் 11 விழுக்காடு அதிகரித்து 63.99 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளதே இந்த நேர்மறையான எதிர்பார்ப்பிற்குக் காரணமாகும் என பொருளாதார நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.








