இஸ்கண்டார் புத்ரி, அக்டோபர்.09-
தனது காதலனனின் ஆணுறுப்பைக் கத்தியால் வெட்டிய வங்காளதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. எம். குமரன் தெரிவித்தார்.
33 வயது தனது காதலன் திருமணமானவர் என்றும், தாயகத்தில் மனைவி இருக்கிறார் என்றும் அறிந்து கொண்ட அந்த வங்காளதேசப் பெண், இந்த கொடூரத்தைப் புரிந்திருப்பதாக குமரன் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை காலை 10.45 மணியளவில் ஜோகூர், கெலாங் பாத்தா, கம்போங் லோக்கான் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
ஆணுறுப்பிலும், இடது கையிலும் கடும் காயங்களுக்கு ஆளான அந்த வங்களாளதேச ஆடவர், ஜோகூர், சுல்தானா அமினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று குமரன் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் மதியம் 12.15 மணியளவில் 34 வயது வங்காளதேசப் பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார். தனது காதலனைத் தாக்குவதற்கு அந்தப் பெண் பயன்படுத்திய 29 செண்டி மீட்டர் நீளமுள்ள ஒரு கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.








