தியோமான் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனலுக்கு வழங்கப்பட்ட மகத்தான வெற்றியைப் போல வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பகாங், பெலங்கை சட்டமன்ற இடைத் தேர்தலிலும் வாக்காளர்கள் அபரிமித வெற்றியை தேடித் தருவார்கள் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றியைத் தடுப்பதற்கு வாக்காளர்களின் சிந்தனையில் விஷத் தன்மையிலான தேர்தல் பிரச்சாரத்தை எதிர்க்கட்சி தொடங்கிய போதிலும் பெலங்கை சட்டமன்றத் தொகுதியை பாரிசான் நேஷனல் தற்காத்துக்கொள்ளும் என்று பாரிசான் நேஷனல் தலைவருமான அகமட் ஜாஹிட் ஹமிடி தெரவித்தார்.
இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் சுயேட்சை வேட்பாளர் என்று மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.








