நாட்டில் மலாய்க்காரர்களின் ஆதரவை பெறுவதில் பாஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக கூறும் அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், இஸ்லாம் அல்லாதவர்களை கவர்வதுதான் தற்போதைய பிரதான இலக்காகும் என்று அறிவித்துள்ளார்.
பிரமிப்பு ஏற்படும் அளவிற்கு மலாய்க்காரிகளின் ஆதரவு பாஸ் கட்சிக்கு உள்ளது. இனி இஸ்லாம் அல்லாதவர்களின் ஆதரவையும் பாஸ் கட்சி பெறுமானால் உள்ளங்கை நெல்லிக்கனிதான் என்றாகி விடும் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
மலாய்க்காரர்களின் ஆதரவு, பாஸ் கட்சிக்கு உண்டு என்பதை கடந்த 15 ஆவது பொதுத் தேர்தல் நிரூபித்துள்ளதாக அந்த மதவாத கட்சித் தலைவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.








