May 21, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஷாபி அப்துல்லாவிற்கு எதிரான மேல்முறையீடு மீட்பு

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தமக்கு வழங்கியதாக கூறப்படும் 95 லட்சம் வெள்ளி சட்டவிரோதப் பணமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள நஜீப்பின் வழக்கறிஞர் ஷஃபி அப்துல்லா விற்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான விண்ணப்பத்தை பிராசிகியூஷன் தரப்பு மீட்டுக்கொண்டது.

தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் நீதிமன்றத்தில் செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீடு மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று சட்டத்துறை அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளதாக ஷாபியின் வழக்கறிஞர் நிறுவனமன ஷஃபி அண்ட் Co. தெரிவித்துள்ளது.

நாட்டின் பிரதமராக நஜீப் பொறுப்பு வகித்த போது அவரிடம் சட்டவிரோதமான முறையில் 95 லட்சம் வெள்ளியை பெற்றதாக கூறி, முன்னணி வழக்கறிஞரான ஷாபி, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News