Oct 5, 2026
Thisaigal NewsYouTube

'பங்களா உணவு' என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்களை அனுப்பி வந்த மோசடிக் கும்பல் கைது!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
'பங்களா உணவு' என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்களை அனுப்பி வந்த மோசடிக் கும்பல் கைது!

கோலாலம்பூர், அக்டோபர்.02-

கடந்த ஓராண்டிற்கும் மேலாக, கிள்ளான் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் மோசடிக் கும்பல் ஒன்றின் செயல்பாடுகளை மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி, ஓப்ஸ் செர்காப் என்ற சிறப்பு நடவடிக்கையின் மூலம் கெப்போங், செராஸ் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடிச் சோதனைகளை நடத்திய அதிகாரிகள், அக்கும்பலைச் சேர்ந்த 3 வங்க தேச ஆடவர்களைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பிஎல்கேஎஸ் என்ற தற்காலிக வேலை அனுமதியைப் புதுப்பிக்கத் தேவையான உடல் பரிசோதனைகளைத் தவிர்க்க, போலி பாஸ்போர்ட்களைத் தயாரித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதே வேளையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்த பாஸ்போர்ட்களை ‘பங்களா உணவு’ என்ற பெயரில் உணவு டெலிவரி செய்வது போல் மோசடிக் கும்பல் அனுப்பி வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →