Sep 25, 2026
Thisaigal NewsYouTube
மாநிலத் தேர்தலை எதிர்கொள்ளக் கூடுதல் போலீசாரைக் களமிறக்க பி.டி.ஆர்.எம் தயார்
தற்போதைய செய்திகள்

மாநிலத் தேர்தலை எதிர்கொள்ளக் கூடுதல் போலீசாரைக் களமிறக்க பி.டி.ஆர்.எம் தயார்

Share:

ஜோஹர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இரு மாநிலங்களின் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலைப் பாதுகாப்பாகவும் சீராகவும் நடத்துவதற்குக் கூடுதல் போலீஸ் பணியாளர்களையும் லாஜிஸ்டிக்களையும் அதிகரிக்க அரச மலேசிய போலீஸ் படை தயாராகி வருகிறது.

தேர்தல் காலத்தில் போதுமான மனிதவளத்தை வழங்குவதற்காக, ஜோஹர் மற்றும் நெகிரி செம்பிலான் போலீஸ் கோன்தின்ஜென்களின் தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் அருகில் உள்ள மாநில போலீஸ் கோன்தின்ஜென்களிடமிருந்து உதவி பெறப்படும் என்றும் புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்துள்ளார்.

பேராக் மாநிலத்தின் புதிய போலீஸ் தலைவராக டத்தோ முகமட் அல்வி ஜைனல் ஆபிதீன் பொறுப்பேற்கும் விழாவிற்குப் பிறகு டத்தோ ஸ்ரீ முகமட் யுஸ்ரி இதனைத் தெரிவித்தார்.

Related News