15-வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டம் திட்டமிட்டபடி வரும் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கும் என்று மக்களவை சபாநாயகர் தான் ஸ்ரீ ஜொஹாரி அப்துல் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தீபகற்ப மலேசியாவின் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் மக்களவைக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படலாம் என்று பரவிய வதந்திகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ கால அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற இணையதள கால அட்டவணையின்படி, இந்த இரண்டாவது கூட்டத்தொடர் ஜூன் 22 முதல் ஜூலை 16 வரை மொத்தம் 16 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. முன்னதாக, 20 நாட்கள் நடைபெற்ற மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.








