Oct 5, 2026
Thisaigal NewsYouTube

சிவப்பு சாயம் வீச்சு: பிடிபட்டவருக்கு நேர்மையான வேலை தேட நீதிபதி அறிவுரை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிவப்பு சாயம் வீச்சு: பிடிபட்டவருக்கு நேர்மையான வேலை தேட நீதிபதி அறிவுரை

மக்களின் வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு சிவப்பு சாயம் வீச்சு நடத்தி, சேதப்படுத்துவதற்குப் பதிலாக, குடும்பத்தைப் பராமரிக்க நேர்மையான வேலை தேடிக் கொள்ளுமாறு 24 வயது இளைஞருக்கு புக்கிட் மெர்தாஜம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஷாரிஃபா ரஸாலி அறிவுரை வழங்கினார்.

கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை ஜாலான் டான் சை கின்னில் உள்ள ஒரு வீட்டின் இரும்புக் கதவு மற்றும் ஹோண்டா சிஆர்-வி வாகனத்தின் மீது சிவப்பு பெயின்ட் வீசிய குற்றத்தை ஒப்புக்கொண்ட டான் திங் ஷெங் என்பவருக்கு 5,000 ரிங்கிட் அபராதமும், அதனைச் செலுத்தத் தவறினால் 12 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

மற்றொரு வீட்டின் சுவர், இரும்புக் கதவு மற்றும் நிசான் வேன் மீது சிவப்பு சாயம் வீச்சு நடத்தியதாக மற்றொரு குற்றத்தையும் அவர் ஒப்புக் கொண்ட நிலையில், இந்த வழக்கில் அவருக்கு 4,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

இத்தகைய செயல்கள் வீட்டின் உரிமையாளர்களுக்கு அவமானத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதுடன், வீட்டிற்கும், வாகனத்திற்கும் மீண்டும் சாயம் பூச கூடுதல் செலவையும் ஏற்படுத்துவதாக நீதிபதி தெரிவித்தார். இது போன்ற சம்பவங்கள் பொதுவாக ‘ஆ லோங் ‘ எனப்படும் வட்டி முதலைகளுடன் தொடர்புபடுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →