கடும் நிதி நெருக்கடியினால் கடந்த வாரம் தனது விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள மலேசியாவின் சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைனை நிதி நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று போக்குவரத்து துணை அமைச்சர் ஹஸ்பி ஹபிபோலா தெரிவித்தார்.
தற்போது அந்த உள்ளூர் விமான நிறுவனம் எதிர்நோக்கியுள்ள பிரச்னையை அதுவே சொந்தமாக தீர்த்துக்கொள்ள வேண்டும். பயணிகளுக்கு திருப்பித் தர வேண்டிய டிக்கெட் பணத்தை அந்த நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த விமான நிறுவனத்தை காப்பாற்றும் எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று இன்று நாடாளுமன்றத்தில் கெப்போங் எம்.பி. லிம் லிப் எங் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ஹஸ்பி ஹபிபோலா மேற்கய்ணடவாறு தெரிவித்தார்.








