Apr 9, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா: 10 இடங்களுக்கு நிலை 1 வெப்ப எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

மலேசியா: 10 இடங்களுக்கு நிலை 1 வெப்ப எச்சரிக்கை

Share:

மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தீபகற்ப மலேசியாவின் 10 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், அந்த இடங்களுக்கு 'நிலை 1' எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணி நிலவரப்படி, கிளாந்தான் மாநிலத்தின் தனா மேரா, பாசிர் மாஸ் மற்றும் மாச்சாங் மாவட்டங்களும், பகாங் மாநிலத்தின் ஜெராண்டுட், தெமர்லோ மற்றும் மாரான் மாவட்டங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மேலும், பேராக் மாநிலத்தின் கிந்தா, சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஜெம்போல் மற்றும் ஜோகூர் மாநிலத்தின் செகாமட் ஆகிய இடங்களிலும் கடும் வெப்பம் நிலவி வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

ஒரு பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலையானது 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் போது இந்த 'நிலை 1' எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

Related News