கூலாய், ஜூலை.15-
ஜோகூர், கூலாயில் கடந்த மாதம் ரப்பர் குழாயைப் பயன்படுத்தி ஆடவர் ஒருவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதாக ஒரு கும்பலைச் சேர்ந்த மூவர், கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
33 வயது ஷாம் சீ ஃபெய், 27 வயது தோம்மி வூ மற்றும் 32 வயது எம். நாகேஸ்வரன் ஆகிய மூவரும், மாஜிஸ்திரேட் ஆர். சாலினி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த மே 23 ஆம் தேதி கூலாய், தாமான் லெஜெண்டா புத்ராவில் 27 வயதுடைய நபரை மரணம் விளைவிக்கும் தன்மையில் ரப்பர் குழாயினால் அடித்துக் காயம் விளைவித்தாக மூவரும் குற்றச்சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








