Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஹாடி அவாங்கிடம் நாளை விசாரணை நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

ஹாடி அவாங்கிடம் நாளை விசாரணை நடத்தப்படும்

Share:

கோலாலாம்பூர், மார்ச் 4 -

இஸ்லாத்தின் உயர்வு தற்காக்கப்பட வேண்டும் என்று கூறி, மலாய் ஆட்சியாளர்களை சிறுமைப்படுத்தும் தன்மையிலான அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவங் கிடம் நாளை செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடச் சட்டத்தின் கீழ் அந்த பாஸ் தலைவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவுட் டில் உள்ள பாஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெறும் இந்த விசாரணையின் போது ஹாடி அவாங்கிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று ஐஜிடிப குறிப்பிட்டார்.

Related News