நெகிரி செம்பிலான், கோலா பிலாவில் உள்ள விளையாட்டுத்துறை பள்ளியின் நான்காம் படிவ மாணவர்கள் இருவர், தங்களுடன் படித்த 14 வயது மாணவரைக் கொலை செய்ததாக இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்.
இருவர் மீதும் குற்றவியல் சட்டம் 302-ஆவது பிரிவுடன், அதே சட்டத்தின் 34-ஆவது பிரிவை இணைத்து குற்றஞ்சாட்ட உத்தரவு கிடைத்துள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
இருவரும் உயிரிழந்த மாணவருடன் ஒரே விடுதிக் கட்டடத்தில் தங்கியிருந்தனர். கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி விடுதியில் மாணவர் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, கோலா பிலா துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.








