Mar 24, 2026
Thisaigal NewsYouTube
தாப்பா தொகுதியில் பொது மண்டபத்தை புதுப்பித்தது எப்படி?
தற்போதைய செய்திகள்

தாப்பா தொகுதியில் பொது மண்டபத்தை புதுப்பித்தது எப்படி?

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 06-

மனித வள அமைச்சின் மனித வள மேம்பாட்டு நிறுவனமான HRD Corp. (எச்.ஆர்.டி.எப். கோர்ப்) தனது சொந்தப்பணத்தை பயன்படுத்தி, பேரா, தாப்பா தொகுதியில் சமூக மையத்தை புதுப்பித்தது எப்படி என்று தேசிய கணக்காய்வுக்குழுவான PAC கேள்வி எழுப்பியுள்ளது.

வேலை இழந்தவர்களுக்கு பயற்சித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, பயிற்சி அளிக்க வேண்டிய மனித வள மேம்பாட்டு நிறுவனமான HRD Corp., முதலீடுத் திட்டங்கள் என்ற போர்வையில் தனது பணத்தை ஊதாரித்தனமாக செலவிட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய கணக்காய்வுக்குழு நேற்று குற்றஞ்சாட்டியிருந்தது.

பயிற்சித் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டிய மனித வள அமைச்சின் HRD Corp. பணம், தாப்பா தொகுதியில் 15 லட்சம் வெள்ளி செலவில் சமூக மையம் ஒன்றை புதுப்பிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு இருப்பது குறித்து HRD Corp. தலைமை செயல்முறை அதிகாரி சாகுல் ஹமீது- டிடம் தேசிய கணக்காய்வுக்குழு விசாரணை நடத்தியுள்ளது.

அந்த விசாரணையில் தேசிய கணக்காய்வுக்குழுவிடம் பதில் அளித்துள்ள HRD Corp. தலைமை செயல்முறை அதிகாரி சாகுல் ஹமீது, அப்போதைய மனித அமைச்சராக இருந்தவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகும்.

சரவணனின் நாடாளுமன்றத் தொகுதி தாப்பா ஆகும். எனவேதான் HRD Corp. நிறுவனம், தாப்பாவில் 15 லட்சம் வெள்ளியை செலவிட்டு அந்த சமூக மையத்தை புதுபித்தது என்று பதில் அளித்துள்ளார்.

HRD Corp. பில் நிகழ்ந்துள்ளாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் இந்த 15 லட்சம் வெள்ளியை செலவினத்தையும் தேசிய கணக்காய்வுக்குழு பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளது.

Related News