பெந்தோங், ஜூலை.22-
கடந்த ஜுலை 10 ஆம் தேதி கெந்திங் ஹைலண்ட்ஸ், ஸ்கைஎவெநியூவில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் ஓர் அந்நிய ஆடவர் உட்பட மூன்று பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
உள்ளூர் பிரஜைகளாக 33 வயது கோபாலகிருஷ்ணன், 43 வயது கூ கிம் ஃபாட் மற்றும் ஒரு சீனநாட்டுப் பிரஜையைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹான் முகமட் கஹார் தெரிவித்தார்.
இந்த கைகலப்பு தொடர்பில் இதற்கு முன்பு, கடந்த ஜுலை 10ஆம் தேதியிலிருந்து சில நபர்களைக்ஹ் தாங்கள் கைது செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
28 க்கும் 61 க்கும் இடைப்பட்ட வயதுடைய எட்டு உள்ளூர் ஆடவர்களையும், மூன்று வெளிநாட்டுப் பிரஜைகளையும் தாங்கள் கைது செய்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.








