Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கேபல்களை களவாடி வந்த பத்து பேர் பிடிபட்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேபல்களை களவாடி வந்த பத்து பேர் பிடிபட்டனர்

அம்பாங், டிச.12-


டெலிக்கோம் மலேசியாவிற்கு சொந்தமான தொடர்புத்துறைக்கான நிலத்தடி கேபள்களை களவாடுவதில் தீவிரம் காட்டி வந்ததாக நம்பப்படும் பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் மற்றும் ரவாங் ஆகிய பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் 18 க்கும் 44 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த பத்து சந்தேகப்பேர்வழிகளும் பிடிபட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

நிலத்தடியில் பொருத்தப்பட்டுள்ள கேபல்களை, வாகனங்களில் துணைக்கொண்டு வெளியே இழுந்து, அவற்றை துண்டு துண்டாக வெட்டி, களவாடும் இந்த கும்பல் தொடர்பில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி 50 வயது நபர் செய்து கொண்ட புகாரைத் தொடர்ந்து இக்கும்பலின் நடவடிக்கையை போலீசார் அணுக்கமாக கண்காணித்து வந்ததாக முகமட் அஸாம் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →