கோலாலம்பூர், நவம்பர்.08-
நச்சுத்தன்மை இருப்பதாகக் கூறி, இரு வகையான ஒப்பனைப் பொருட்களைச் சுகாதார அமைச்சு தடை செய்துள்ளது.
JJF Cream Herba மற்றும் JF Cream Treatment ஆகியவையே தடை செய்யப்பட்டுள்ள இரு ஒப்பனைப் பொருட்களாகும்.
அவற்றில் பாதரசம் கலவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்விரண்டு ஒப்பனைப் பொருட்களையும் சந்தையிலிருந்து மீட்டுக் கொள்ளும்படி ஒப்பனைப் பொருட்கள் விற்பனை மையங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.








