May 24, 2026
Thisaigal NewsYouTube
முகிடின் 'தான் ஸ்ரீ’ பட்டத்திற்குத் தகுதியானவர் அல்ல
தற்போதைய செய்திகள்

முகிடின் 'தான் ஸ்ரீ’ பட்டத்திற்குத் தகுதியானவர் அல்ல

Share:

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 20-

முன்னாள் பிரதமர் முஹ்யித்தீன் யாசின்-னுக்கு வழங்கப்பட்டுள்ள "டான் ஸ்ரீ" பட்டத்தை திரும்பப் பெறுமாறு பஹாங் துணை சபாநாயகர் லீ சின் சென் வலியுறுத்தியுள்ளார்.

முஹ்யித்தீன், பொதுமக்கள் குழம்பம் அடையும் அளவிற்கு, 15-வது பொதுதேர்தலுக்குப் பிறகு நடந்த பிரதமர் நியமனம் குறித்தும் முன்னாள் பேரரசரின் ஆட்சியைக் குறித்தும் அவதூறாக பேசியதே எனது இக்கூற்றுக்கு காரணம் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

"டான் ஸ்ரீ" பட்டம் உன்னதமான உயர்ந்த கவுரவமிக்க அங்கீகாரம் என்பதால், நாட்டின் அரசை மதிக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவது ஏற்புடையதாக இருக்கும் என்றும் லீ சின் சென் கூறினார்.

அதுமட்டுமிறி, மூத்த அரசாங்கப் பதவியை வகித்த ஒரு தலைவர் என்ற முறையில் MUHYIDDIN அரசியலமைப்பு கோட்பாடுகளை மதித்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News