47 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விமான விபத்தில், அன்றைய சபா முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டீபன்ஸ், மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த அந்த்த துயரச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓசா எனப்படும் ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் ஏன் வைக்கப்பட்டது என்பதற்கான காரணங்களை வழங்க இயலவில்லை என்று போக்கு வரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
47 ஆண்டுகளுக்குப் பிறகு, போக்குவரத்து அமைச்சினால் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட டபல் சிக்ஸ் என்ற அந்த விமான விபத்துக்குக் காரணம், விமானியின் பலவினமான செயல்திறனே என்று விளக்கப்பட்ட போதிலும், கீழறுப்பு செயலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆண்டனி லோக் விளக்கினார்.
ஆனால், அந்த அறிக்கை, ரகசியம் காக்கப்பட்டதற்கான காரணங்கள் ஏன் என்பது தமக்கு விளங்கவில்லை என்று அமைச்சர் விளக்கினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


