Sep 29, 2026
Thisaigal NewsYouTube
சீனப் புத்தாண்டு: டோல் கட்டணம் தள்ளுபடி மற்றும் விலை கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
தற்போதைய செய்திகள்

சீனப் புத்தாண்டு: டோல் கட்டணம் தள்ளுபடி மற்றும் விலை கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.06-

2026-ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, வாகன ஓட்டிகளுக்கு டோல் கட்டணத் தள்ளுபடி வழங்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சொந்த ஊர் திரும்புவோரின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த டோல் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்கள் மற்றும் தேதிகளை பொதுப்பணி அமைச்சு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்தார்.

Related News