Oct 9, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு டிரெய்லர் லோரிகள் மோதல்: ஒருவர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு டிரெய்லர் லோரிகள் மோதல்: ஒருவர் பலி

மூவார், ஜூலை.12-

இரண்டு டிரெய்லர் லோரிகள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். இச்சம்பவம் இன்று அதிகாலையில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர், மூவாருக்கு அருகில் நிகழ்ந்தது.

இவ்விபத்து குறித்து அதிகாலை 2.47 மணிக்கு பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைத் தாங்கள் பெற்றதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.

ஹீனோ மற்றும் நிஸ்ஸான் ரக லோரிகள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் 46 வயது நிஸ்ஸான் ரக லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் அவரின் உதவியாளர் கடும் காயங்களுக்கு ஆளாகியுள்ளார் என்று ஏசிபி ரயிஸ் குறிப்பிட்டார்.

இதில் ஹீனோ ரக ஓட்டுநர் எவ்வித காயங்களுக்கும் ஆளாகவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →