Oct 1, 2026
Thisaigal NewsYouTube

பேரா மாநிலத்தில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு அடுத்த ஆண்டு மார்ச் முதல் தேதி தடை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேரா மாநிலத்தில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு அடுத்த ஆண்டு மார்ச் முதல் தேதி தடை

ஈப்போ, டிசம்பர்.20-

பேரா மாநிலத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கான முழுமையான தடை 2026 மார்ச் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

இதனை பேரா மாநில அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் பசுமை தொழில்நுட்ப ஆட்சிக்குழு உறுப்பினர் தே கோக் லிம் இன்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தத் தடை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படுவதாக இருந்தது. ஆனால், பொதுமக்கள் போதிய முன்னேற்பாடுகளைச் செய்ய கால அவகாசம் அளிக்கும் வகையில், இது மார்ச் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகம் தே கோக் லிம் தெரிவித்துள்ளார்.

பல்பொருள் அங்காடிகளான Supermarket- டுகள், Convenience stores கடைகள், துரித உணவு விடுதிகள் மற்றும் மருந்தகங்கள் உள்ளிட்ட நிரந்தர வணிக வளாகங்களில் இந்த தடை அமல்படுத்தப்படும் என்று தே கோக் லிம் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →